ஒரே பயிருக்கு வெவ்வேறு விலை


Nature

நமது ஃபார்ம்டே மொபைல் ஆப்பின் (App) பயனாளியான விவசாய நண்பர் ஒருவர் இந்த ஆப்பை பற்றி கருத்துகளையும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் உள்ள புதிய அம்சங்களை பற்றியும் ஃபார்ம்டே ஆப்பில் பதிவிட்டிருந்தார். அவருடைய பரிந்துரைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரை அணுகிய போது அவர் கூறிய ஒரு நிகழ்வை பற்றியே இந்த பதிவு.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த அந்த விவசாய நண்பர் ஜூலை 24, 2021 அன்று தனது தோட்டத்தில் மொந்தை வாழைப்பழத்தை தார் ஒன்று ரூ.260/- என விற்றுள்ளார். அதே நாளன்று அவரது தோட்டத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு விவசாயின் தோட்டத்தில் அதே தரத்தில் உள்ள சுமார் 100 மொந்தை வாழைத்தாரைகளை ரூ.160/- க்கு விற்றுள்ளார். இது போன்ற விலை வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை சரியான விலைக்கு விற்க உதவுவதே இந்த ஃபார்ம்டே ஆப்பின் முக்கிய குறிக்கோளாகும்.

ஃபார்ம்டே ஆப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களின் விலையை தெரிந்துகொண்டு சரியான விலைக்கு விற்கலாம். மேலும் இந்த ஆப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பயிர்களின் விற்பனை விலையை சகவிவசாயிகளுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். இவ்வாறு பயிரின் விலையை பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள் பதிவு செய்யும் பொழுது, விவசாயிகள் தங்கள் பயிர் மற்ற இடங்களில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அறிந்து தங்கள் பயிர்களை சரியான விலைக்கு விற்க முடியும்.

இந்த ஆப்பை பயன்படுத்தி உங்கள் பயிர்களின் சரியான விலையை அறிந்து விற்க விரும்பினால், தயவுசெய்து கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி இந்த ஆப்பில் உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://farmday.page.link/igTc6MBSD3DFQjXEA

நன்றி!!!