வணக்கம்!!! விவசாயிகளுக்காக ப்ரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஃபார்ம்டே மொபைல் ஆப்பின் (App) முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு பயிர்களின் சரியான விற்பனை விலையை அறிந்துகொள்ள உதவுவதே. இந்த ஆப்பை வெளியிட்ட சில மாதங்களிலேயே பயிர்களின் விற்பனை விலை வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஜுன் 9, 2021 அன்று கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தில் உள்ள ஒரு விவசாயி தனது தோட்டத்தில் விழைந்த செவ்வாழையை கிலோ ஒன்றுக்கு ரூ.27 க்கு விற்றுள்ளார். அதே நாளன்று அதே மாவட்டம் அதே வட்டத்தில் உள்ள மற்றொரு விவசாயி செவ்வாழைப்பழத்தின் சந்தை விலை ரூ.27 என்று தெரியாமல், பல மாதங்கள் உழைத்து விளைவித்த செவ்வாழையை ரூ.18/கிலோவிற்கு விற்றுள்ளார். அவருடைய பயிரின் தரம் குறைவாக இருந்திருந்தாலும், ரூ.9/கிலோ விலை வேறுபாட்டை நியாயப்படுத்த முடியாது. விற்பனை விலையில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளது? இதுபோன்ற வேறுபாடுகளை கலைந்து தங்கள் பயிர்களுக்கு சரியான விலையைப் பெற இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்தவும்.
ஃபார்ம்டே ஆப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களின் விலையை தெரிந்துகொண்டு சரியான விலைக்கு விற்கலாம். மேலும் இந்த ஆப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பயிர்களின் விற்பனை விலையை சகவிவசாயிகளுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். இவ்வாறு பயிரின் விலையை பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள் பதிவு செய்யும் பொழுது, விவசாயிகள் தங்கள் பயிர் மற்ற இடங்களில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அறிந்து தங்கள் பயிர்களை சரியான விலைக்கு விற்க முடியும். விவசாயிகள் மட்டுமே இந்த ஆப்பை பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்காக, இந்த ஆப்பில் தங்களை புதிதாக பதிவு செய்து கொள்ளவிரும்பும் விவசாயிகள் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் ரெஃப்பரல் (Referral) லிங்க் மூலமாக மட்டுமே தங்களை பதிவு செய்த்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு, 9842765275 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.