விவசாய நண்பர் ஒருவர், ஃபார்ம்டே மொபைல் ஆப்பின் (App) மூலம் தனது தோட்டத்தில் விளைத்த ரஸ்தாளி வாழைப்பழத்தின் விலையை அறிந்து, அதை சரியான விலைக்கு விற்றதை பற்றியே இந்த பதிவு.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தை சேர்ந்த அந்த விவசாய நண்பரின் ரஸ்தாளி வாழைப்பழத்தை தார் ஒன்றுக்கு ₹ 180/- என ஒரு வியாபாரி கேட்டுள்ளார் அச்சமயம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கிலோ ஒன்றுக்கு ₹ 26 என விற்றுள்ளதை ஃபார்ம்டே ஆப்பின் மூலம் அறிந்து அவரிடம் விற்கவில்லை. பின்னர் அதே ரஸ்தாளி வாழைப்பழத்தை மற்றொரு வியாபாரிக்கு தார் ஒன்றுக்கு ₹ 300/- என விற்றுள்ளார். அவருக்கு ரஸ்தாளியின் தற்போதைய சந்தை விலை தெரியாமல் இருந்திருந்தால், அவர் அதை மிகக் குறைந்த விலைக்கு விற்றிருப்பார்.
இந்த ஃபார்ம்டே மொபைல் ஆப்பின் முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு பயிர்களின் சரியான விற்பனை விலையை அறிந்து கொள்ள உதவுவதே. இந்த ஆப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே இது போன்று பல விவசாயிகள் தங்கள் பயிர்களை சரியான விலைக்கு விற்க உதவுதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஃபார்ம்டே ஆப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களின் விலையை தெரிந்துகொண்டு சரியான விலைக்கு விற்கலாம். மேலும் இந்த ஆப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பயிர்களின் விற்பனை விலையை சகவிவசாயிகளுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். இவ்வாறு பயிரின் விலையை பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள் பதிவு செய்யும் பொழுது, விவசாயிகள் தங்கள் பயிர் மற்ற இடங்களில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அறிந்து தங்கள் பயிர்களை சரியான விலைக்கு விற்க முடியும்.
இந்த ஆப்பை பயன்படுத்தி உங்கள் பயிர்களின் சரியான விலையை அறிந்து விற்க விரும்பினால், தயவுசெய்து கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி இந்த ஆப்பில் உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
https://farmday.page.link/PJUqL1j6QmNRSwb17
இந்த லிங்க்கின் மூலம் ரெஜிஸ்டெர் செய்தவுடன், ஆப்பில் உள்ள இன்வைட்(Invite) பட்டனை பயன்படுத்தி இந்த ஆப்பை (App) மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதற்கு முன்னரும் இது போன்ற விலை வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு இந்த ஃபார்ம்டே ஆப் உதவியுள்ளது அதை பற்றிய பதிவுகள் கீழே உள்ளது.
http://farmday.co.in/blogs/Sathy_Mondhan_Banana_Price_Difference.php
http://farmday.co.in/blogs/annur_red_banana_price_variance.php
http://farmday.co.in/blogs/udumalpet_nendhiran_price_variance.php
நன்றி!!!.